கோக்லா பீச், தியூ

கோக்லா பீச் எனும் இந்த கடற்கரை தியூ நகரத்திலிருந்து 631 கி.மீ தள்ளி கோக்லா கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மணற்பாங்கான இந்த கடற்கரை தியூ மாவட்டத்தில் உள்ள பெரிய, அமைதியான, ரம்மியமான கடற்கரையாகும்.

தங்கநிற மணற்பரப்பானது தொடுவான தூரத்தில் அலைகள் போன்று எழும்பி அடங்குவது போன்ற மாயக்காட்சியை இந்த கடற்கரையில் பார்த்து ரசிக்கலாம்.

நீச்சல், மிதவைச்சவாரி, நீர்ச்சறுக்கு போன்ற சாகச நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட மகிழ இது மிகவும் ஏற்ற கடற்கரையாகும். நீர் விளையாட்டுகளில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மிருதுவான மணற்பரப்பில் ஓய்வெடுக்கலாம்.

தனிமை விரும்பிகள், மற்றும் இயற்கை ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய எழில் பிரதேசமாக இது அமைதியுடன் வீற்றிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள மீனவக்குடியிருப்புகள், சர்ச்சுகள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றிற்கு விஜயம் செய்து ரசிக்கவும் இந்த கடற்கரை ஸ்தலம் உதவுகிறது. இங்குள்ள சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவை கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...