செயிண்ட் பால் சர்ச், தியூ

ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித பால் பெயரில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்களால் தியூ நகரத்தில் கட்டப்பட்ட மூன்று சர்ச்சுகளில் இது ஒன்று மட்டுமே இன்றும் இயங்கி வருகிறது.

எஞ்சியிருக்கும் கிறிஸ்துவ தலைமுறையினர் சிறிய எண்ணிக்கையில் பிரார்த்தனைக்காக இந்த தேவாலயத்தில் கூடுகின்றனர். 1610ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த சர்ச் ‘அவர் லேடி ஆஃப் இம்மாகுலேட் கான்செப்ஷன்’ என்ற பெயரில் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த தேவாலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவை பரோக் பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டிருக்கின்றன. இதன் உட்பகுதியில் பல நுணுக்கமான மர அலங்கார வேலைப்பாடுகளை பார்வையாளர்கள் காணலாம்.

செயிண்ட் மேரி சிலையை கொண்டிருக்கும் பீடப்பகுதியானது உறுதியான பர்மா தேக்கு மரத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. வரிசையாக 101 மெழுகுவர்த்திகளை ஏற்றக்கூடிய விதத்தில் அளவில் பெரியதாக இந்த பீடப்பகுதி காட்சியளிக்கிறது. பீட அமைப்பின் மேற்பகுதியில் ஓவியங்கள் மற்றும் சிலைகளும் காணப்படுகின்றன.

தேவாலயத்தில் வெளிப்பகுதியில் உள்ளூர் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ள ஸ்டுக்கோ வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. உட்பகுதியில் அமைந்திருக்கும் அம்சங்களுக்கு நிகரான நுணுக்கமான கலையம்சங்கள் வெளிப்புறத்திலும் அமைந்திருக்கின்றன.

Please Wait while comments are loading...