கங்கேஷ்வர் கோயில், தியூ

கங்கேஷ்வர் எனும் பெயர் சிவபெருமானைக்குறிக்கிறது. கங்கை நீர் அவரது சிரசிலிருந்து உற்பத்தியாவதாக ஐதீகம் குறிப்பிடுவதால் கங்கேஷ்வர் எனும் பெயர் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த கங்கேஷ்வர் கோயில் தியூ நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள ஃபதும் எனும் கிராமத்தில் உள்ளது.

ஒரு குகைக்கோயிலாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் கடற்கரையை ஒட்டி பாறைகளின் நடுவே காணப்படுகிறது. இதன் உள்ளே தரை மட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஐந்து சிவலிங்கங்களும் அரபிக்கடலின் நீரால் தொடர்ந்து கழுவப்படுகிறது.

சிவபெருமான் மீதான பக்தியை பெருங்கடல் இவ்வாறு வெளிப்படுத்துவதாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.

புராண ஐதீகங்களின்படி பஞ்ச பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தை இப்பகுதியில் கழித்தபோது தினசரி பூஜைக்கென இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே மஹாபாரத காலத்தை சேர்ந்த பழமையை உடைய கோயில் எனும் பெருமையை இந்த கோயில் பெற்றுள்ளது.

கடல் நீர் உட்புகுந்து வெளியேறும்படியாக அமைந்திருக்கும் இந்த கங்கேஷ்வர் பாறைக்குகை கோயில் பக்தர்கள் மத்தியில் ஆன்மீக ரீதியாக பிரபல்யமடைந்துள்ளது.

Please Wait while comments are loading...