ஃபொர்ட்டிம் டோ மார் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த பனி கொத்தா கோட்டையானது அரபிக்கடலில் இணையும் ஒரு ஓடையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை கோக்லா கிராமத்திற்கு அருகில் தியூ படகுத்துறையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கிறது.
ஒரு கப்பலை போன்ற வடிவத்தில் கடல் நீருக்குள் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஒரு சுரங்கக்கால்வாய் மூலமாக இது நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
சுற்றியுள்ள கடற்பகுதியின் எழிலை நன்கு ரசிப்பதற்கு இந்த கோட்டை ஒரு அற்புதமான காட்சித்தளமாக வீற்றிருக்கிறது. படகுத்துறை, கோக்லா கிராமம் மற்றும் தியூ நகரம் போன்றவற்றை இந்த கோட்டையிலிருந்து நன்றாக பார்க்கலாம்.
இரவு நேரத்தில் பிரத்யேக விளக்குகள் இந்த கோட்டைப்பகுதியை வெளிச்சப்படுத்தும் காட்சி பார்வையாளர்களை மனம் மயங்க வைக்கும் ஒரு அம்சமாகும். கியாமத் எனும் பிரசித்தமான ஹிந்தி சினிமாவில் இந்த கோட்டை இடம்பெற்றுள்ளது. கரையிலிருந்து கோட்டைக்கு செல்வதற்கு ஃபெர்ரி படகுச்சேவை இயக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications