எண்ணற்ற மலையேற்ற வழிப்பாதைகளை கொண்டிருக்கும் முதன்மையான தளமாக இருக்கும் கிஸ்ட்வார் நகரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து மலையேற்றங்களையும் செய்ய ஏற்ற இடமாகும்.
இந்த நகரத்திற்கு அருகிலேயே நம்ட்ஸே-6000 மீ, கதீட்ரல்-5370 மீ, சார்ச்சா-6065 மீ, லாலுங், எய்கர்-6001 மீ மற்றும் சிக்கிள் மூன்-6574 மீ ஆகிய மலைப் பகுதிகள் அமைந்துள்ளன.
மேலும் கண்கவரும் பள்ளத்தாக்குகளான பாட்டார், மார்வா மற்றும் டாச்சன் ஆகியவற்றையும் கொண்ட இடமாக இந்த நகரம் உள்ளது. இங்கிருக்கும் பந்தர்கோட்டே குகையும் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
இந்துக்களிடம் புகழ் பெற்ற புனித யாத்திரையான மச்சையில் யாத்திரைக்காகவும் இந்நகரம் புகழ் பெற்றது. இந்த புனித யாத்திரை மச்சையிலில் உள்ள சாண்டி மாதா கி மந்திரில் முடிவடைகிறது.



Click it and Unblock the Notifications