தத்லோய் எனும் இந்த சுற்றுலாத்தலத்தில் ஒரு இயற்கை வெந்நீர் ஊற்று அமைந்திருக்கிறது. இந்த இடத்தை சுற்றிலும் ரம்மியமான இயற்கை காட்சிகள் காணப்படுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.
குளிர்காலத்தின்போது பயணிகள் இந்த இடத்தில் பிக்னிக் சிற்றுலா பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். ஹீலியம் வாயு நிரம்பியுள்ள இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெளிப்படும் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இயற்கைக்காட்சிகள் நிரம்பி காட்சியளிப்பதால் இந்த தத்லோய் சுற்றுலாத்தலம் இயற்கை ரசிகர்களிடையே பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
தும்கா நகரிலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பதால் இந்நகரத்தில் வசிக்கும் மக்கள் பிக்னிக் பயணமாக இந்த இடத்திற்கு வருகை தந்து இயற்கையை ரசிக்கின்றனர். ராம்கர் மலைகள் மற்றும் புர்புரி ஆறு போன்றவை இந்த தத்லோய் ஸ்தலத்தின் எழிலைக்கூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications