சத்தீஸ்கரின் முக்கியமான நகரமான துர்க் புகழ்பெற்ற தொழில் மற்றும் விவசாய நகரமாகத் திகழ்கிறது. சியோநாத் நதிக்கரையில் உள்ள துர்க், சட்டீஸ்கரின் மூன்றாவது பெரிய நகரமாகும். மக்கள் தொகை அதிகமுள்ள இந்நகரம் தாது வளத்திலும் சிறந்து விளங்குகிறது,
சமவெளி மற்றும் தெற்கு பீடம் என இந்நகரை இரண்டாகப் பிரிக்கலாம். 345கிமீ நீளமுள்ள சியோநாத் நதி இவ்வழியாக ஓடுகிறது. கர்காரா என்ற நதியும் இங்குண்டு.
தக்ஷிணத்தின் பகுதியாக இந்நகரம் இருந்ததாக வரலாறு சொல்கிறது, அசோகருக்குப் பிறகு மராத்தியர்களும், அவர்களுக்குப் பின் ஆங்கிலேயர்களும் இங்கு ஆண்டிருக்கிறார்கள். 1906ல் மாவட்டமாக ஆக்கப்பட்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 2001ன் கணக்குப்படி 2,31,182 ஆகும்.
துர்க் கலாச்சாரம்!
வளமான பாரம்பரியமும் கலாச்சாரமும் உள்ள இந்நகரத்தில் 35 வகை பழங்குடியினர் வசிக்கிறார்கள். பலவகையான நடனங்களும், இசைவடிவங்களும் இங்கு உண்டு.
பத்வானி என்ற புகழ்பெற்ற நாடோடி ஆட்டம் இங்கு உள்ளது. பாண்டவர்களின் கதையச் சொல்லுமாறு அமைந்துள்ள இந்த ஆட்டத்தில் பாடலும் பாடப்படுகின்றன.
ராவுத்நச்சா என்ற மற்றொரு ஆடல்கலையும் இங்கு உள்ளது. மேய்ப்பர்களால் ஆடப்படும் கிருஷ்ணரை வழிபடும் இந்தக் கலை யாதவர்களின் கலை என வழங்கப்படுகிறது.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
ஶ்ரீ உவாசகரம் பர்ஷ்வ தீர்த், சண்டி மந்திர், கங்கா மையா கோவில், தியோபாலோடா, ஜைன கோவில்கள் என பலவகையான மத தளங்கள் இங்கு உள்ளன. மேலும் ஹிந்தி பவன், படான், ப்ராசின் கிலா, பலோட், டண்டுலா, மைத்ரி பாக் ஆகிய இடங்களும் உண்டு.
துர்க் வானிலை
மித வெப்ப மண்டலமாக திகழும் இங்கு மிகவும் வெப்பமான வானிலையும், அதிக மழையும் பெய்கிறது. மழைக்காலங்களில் 1052மிமீ வரை மழை பெய்கிறது.
துர்க் அடையும் வழி
விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் துர்க் நகரை சுலபமாக அடையலாம்.



Click it and Unblock the Notifications