துவாரகா நகரத்தில் கோபி தலாவ் எனும் இந்த சிறிய குளம் அமைந்துள்ளது. இது கோபிகா ஸ்தீரிகளுடன் கிருஷ்ணர் ராசலீலையில் ஈடுபட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது. துவாரகா நகரத்திலிருந்து வடக்கே 20 கி.மீ தூரத்தில் இந்த குளம் உள்ளது.
இந்த குளத்தை சுற்றி காணப்படும் மண் வழவழப்பான மஞ்சல் நிறத்தில் காணப்படுகிறது. பக்தர்கள் இதனை கோபி சந்தன் என்று குறிப்பிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்கின்றனர்.
கோபி தலாவ் குளத்தோடு சம்பந்தப்பட்ட பல புராணக்கதைகளும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒரு கதையின்படி, பிருந்தாவனத்தில் கிருஷ்ணரோடு ஆடிப்பாடி மகிழ்ந்திருந்த கோபிகையர் அவரது பிரிவினால் வாடி பின்னர் ஒரு பௌர்ணமி நாளில் இந்த குளப்பகுதிக்கு விஜயம் செய்து கிருஷ்ணரை சந்தித்தாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications