1987-ஆம் ஆண்டு பல்வகைப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஈரோடு அருங்காட்சியகம் கலை, மானிடவியல் மற்றும் கல்வெட்டுகள் முதலான பல பொருட்களை கொண்டுள்ள இடமாகும்.
இந்த மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சார சின்னங்களை ஒருங்கே பெற்றிருக்கும் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இவ்விடம் திகழ்கிறது. வல்லுநர்கள் இந்த அருங்காட்சியகத்தை மதிப்பு மிக்க காட்சிக்கூடமாக வரையறை செய்கின்றனர்.
வெள்ளிக்கிழமைகளிலும், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளிலும் மட்டும் விடுமுறையில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமைளிலும் திறந்திருக்கும்.
இந்த மியூசியத்தில் ஏகப்பட்ட புராண சின்னங்கள் உள்ளன. கலையை பாதுகாப்பதில் தனித்துவம் காட்ட விரும்பும் இந்த அருங்காட்சியகம் மிகவும் நன்றாக பராமாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கிருக்கும் பழங்கால ஒப்பந்த பதிவுகள் மக்களை பெரிதும் ஈர்க்கும் விஷயங்களாகும். இந்த மியூசியம் 1200 சதுர அடிக்கும் அதிகமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் மேலும் பல புராதன, தனித்தன்மையான சின்னங்களை இங்கு வைப்பதற்காக முயற்சித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications