ஹுர்ஹுரே தாரா எனும் இந்த அழகிய மலைக்காட்சி தளத்திலிருந்து காங்க்டோக் நகரையும் அதனைச்சுற்றியிருக்கும் எழிற்காட்சிகளையும் பயணிகள் நன்றாக ரசித்து மகிழலாம். சிக்கிம் சட்டப்பேரவை வளாகத்திற்கு அருகில் நம்நங் எனும் இடத்தில் இது அமைந்துள்ளது.
பசுமையான பள்ளத்தாக்குகள், கண்ணைக்கவரும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை இந்த மலைக்காட்சி தளத்திலிருந்து கண்களால் அள்ளிப்பருகலாம். சிகரத்தை ஒட்டியே ஏகாந்தமாக நடை பயின்றபடியோ அல்லது இங்குள்ள இருக்கைகளில் அமர்ந்தபடியோ இயற்கையின் எழிலை அனுபவிக்கலாம்.



Click it and Unblock the Notifications