Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்டாக் » ஈர்க்கும் இடங்கள் » சிக்கிம் சைன்ஸ் செண்டர்

சிக்கிம் சைன்ஸ் செண்டர், காங்க்டாக்

63

காங்க்டாக் நகரத்துக்கு அருகில் மர்ச்சக் எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிக்கிம் சைன்ஸ் செண்டர் எனும் இந்த மையம் ஒரு புதுவிதமான அமைப்பாகும். அறிவியல் பார்வை மற்றும் அறிவினை மக்களிடையே வளர்ப்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த வித்தியாசமான விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சிகளை இது அளித்து வருகிறது. இந்த மையத்தில் உள்ள காட்சிக்கூடங்களில் ஹ்யூமன்கைன்ட் கேலரி, ஃபன் சைன்ஸ் கேலரி, தரமண்டல், மாணவர் காட்சிக்கூடம் மற்றும் சைன்ஸ் பார்க் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் ஒரு சிறு அறிமுகம் இங்கே தரப்படுகிறது.

ஹ்யூமன்கைன்ட் கேலரி: இந்த அருங்காட்சியகத்தில் மனித இனத்தின் வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதில் 42 வித்தியாசமான எலக்ட்ரானிக் காட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமியின் வசிக்கும் மற்ற உயிரினங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட மனித இனத்தின் உச்ச நிலை குறித்து இந்த காட்சியமைப்புகள் எடுத்து சொல்லுகின்றன.

இதில் உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம், தசை அமைப்பு, ரத்த ஓட்டம், மரபியல் ஆகிய மனித உயிரியல் தொடர்பான எல்லா பிரிவுகளும் படங்களுடன் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.

பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களை சோதிக்கும் வகையில் ஐ. கியூ கார்னர், பசில்ஸ் கார்னர், மல்ட்டிமீடியா கார்னர் மற்றும் ஒளியியல் மாயக்காட்சி அமைப்புகள் போன்ற அம்சங்களும் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஃபன் சைன்ஸ் கேலரி: இந்த காட்சிக்கூடத்தில் அறிவியல் குறித்த பல உண்மைகளை பார்வையாளர்கள் வித்தியாசமான முறையில் பொழுதுபோக்கு போன்று தெரிந்துகொள்ளலாம். இங்குள்ள பார்வையாளர்களே பயன்படுத்தி தெரிந்து கொள்ளும் வகையில் சில மாதிரி கருவி அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

புவியீர்ப்பு மீறல் கருவி, குட்டிக்கரணம் அடிக்கும் பந்து, வண்ணமயமான நிழல்களை உருவாக்கும் ஒளிக்கதிர், வேடிக்கை கண்ணாடிகள், ஒளியியல் மாயக்காட்சி அமைப்புகள் மற்றும் இன்னும் ஏராளமான அறிவியல் கருவி அமைப்புகளை இந்த காட்சிக்கூடத்தில் காணலாம்.

சில்ரன்’ஸ் கார்னர்: சைன்ஸ் சென்டர் மையத்தில் குழந்தைகளுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் பிரத்யேக பிரிவு இது. இங்கு குழந்தைகளுக்கேற்ற பல கருவி அமைப்புகள் மற்றும் புதிர்க்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப்பிரிவில் குழந்தைகளுக்கு மட்டுமே முழுக்கவனம் அளிக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் குறித்து கற்றுக்கொள்ள ஏதுவாக இங்கு ஒரு மல்டிமீடியா குவிஸ் காட்சி அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தரமண்டல்: தரமண்டல் எனும் இது வானவியல் காட்சிக்கூடமாகும். விண்வெளியில் சென்று கிரகங்களையும் நட்சத்திரங்களையும் அருகில் பார்ப்பது போன்ற   அனுபவத்தை இது அளிக்கிறது.

25 பார்வையாளர்களை ஒரே சமயத்தில் அமரும்படியான இந்த கோளரங்கிலிருந்து காங்க்டோக் பகுதியின் வான்வெளி அழகை இரவு நேரத்தில் நன்றாக பார்த்து ரசிக்கலாம். புவியின் வடகோள வான்வெளியையும் இதிலிருந்து பார்க்க முடியும். விண்வெளி அறிவியல் தொடர்பாக ஒரு காட்சிவிளக்க திரையிடல் நிகழ்ச்சியும் இங்கு பார்வையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஸ்டூடண்ட்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ் கார்னர்: இந்த விசேஷப்பிரிவில் மாணவப்பருவத்தினர் அறிவியல் குறித்த பல அடிப்படை தத்துவங்களை தெரிந்து கொள்ளும் வகையில் காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மாணவர்களே இங்கு சோதனைகள் மேற்கொண்டு புரிந்து கொள்ளும் வகையில் கருவி அமைப்புகள் உள்ளன. இந்த பிரிவின் மூலம் மாணவர்களுக்கான அறிவியல் வினாடி வினா, கருத்தரங்கு, சந்தைத்திருவிழா, விடுமுறை முகாம்கள் போன்றவையும் நடத்தப்பட்டுவருகின்றன.

சிக்கிம் சைன்ஸ் செண்டர் மையத்தின் மூலம் தேசிய அறிவியல் நாள், உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம், தேசிய தொழில்நுட்பவியல் தினம் போன்ற அறிவியல் தொடர்பான எல்லா தினங்களும் அவை தொடர்பான விசேஷ நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டு வருகின்றன.

அறிவியல் பார்வையை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிக்கிம் சைன்ஸ் செண்டர் காங்க்டோக் நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed