காங்க்டாக் நகரத்துக்கு அருகில் 8 கி.மீ தூரத்தில் இந்த இந்த டாஷி வியூ பாயிண்ட் எனும் ரம்மியமான மலைக்காட்சி தளம் அமைந்திருக்கிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் கம்பீரத்தை இங்கிருந்து தரிசிக்கலாம்.
ஒரு காட்சிக்கோபுரம் மற்றும் தேநீரகம் போன்றவையும் இங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. காங்க்டோக் பகுதியில் வீற்றிருக்கும் போடோங்க் மற்றும் லப்ரங் எனப்படும் அழகான மடாலயங்களையும் இந்த காட்சித்தளத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம்.
காலை நேரத்தில் இந்த மலைக்காட்சி தளத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது. இந்த இடத்திற்கு சற்று உயரத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றுக்கும் பயணிகள் செல்லலாம். இந்த பூங்காவிலுள்ள தேனீரகத்தில் டீ, காபி,மோமோ மற்றும் இதர தின்பண்டங்களை ருசித்தபடியே இயற்கையையும் ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications