கணபதிபுலே ஸ்தலத்தில் இந்த ஜய்காட் கோட்டை மற்றும் கலங்கரை விளக்கம் இரண்டும் முக்கிய சுற்றுலா அம்சங்களாக புகழ்பெற்று அறியப்படுகின்றன. இங்குள்ள தீபகற்ப முனையில் உள்ள ஜய்காட் கலங்கரை விளக்கம் 180 வருடங்களுக்கு முன்னர் 1832ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இது சித்த புருஜ் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளை கடந்துள்ள போதிலும் இன்னமும் இந்த கலங்கரை விளக்கம் இயங்கும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பயணிகள் ஞாயிறு தவிர்த்த எல்லா வார நாட்களிலும் இந்த கலங்கரை விளக்கத்துக்கு விஜயம் செய்யலாம்.
அருகாமையிலேயே ஒரு மலையுச்சியில் ஜய்காட் கோட்டை அமைந்துள்ளது. இது கணபதிபுலேயிலிருந்து சுமார் 35 கி.மீ தூரத்தில் உள்ளது. பெரும்பாலும் சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கும் இந்த கோட்டையின் வெளிச்சுவர் இன்னமும் சிதையாமல் உறுதியுடன் காணப்படுகிறது.கோட்டைப்பகுதியின் உச்சியிலிருந்து சங்கமேஷ்வர் நதி அரபிக்கடலில் கலக்கும் காட்சியை தூரத்தில் பார்க்க முடிகிறது.



Click it and Unblock the Notifications