நந்தவன் மற்றும் டோப்பவன் ஆகிய பகுதிகள் கங்கோதரி பனியாற்றுக்கு எதிர் திசையில் 6 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்றன. நந்தவன் பகுதியிலிருந்து ஷிவ்லிங், பகிரதி, கேடர் டோம், தலாய் சாகர் மற்றும் சதர்ஸனா போன்ற மலைச் சிகரங்களை மிகத் தெளிவாகக் கண்டு களிக்க முடியும்.
பனிச்சறுக்கு மூலம் சட்டோபேன்ட், கார்ச்குன்ட், களின்டி கால், மேரு மற்றும் கேடர்டோம் ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த நந்தவன் பகுதியில் கூடாரம் அடித்து தங்குவதுண்டு.
மேலும் இங்கிருந்து பகிரதி ஆற்றுப் பகுதியில் பனிச்சறுக்குச் செய்து கொண்டே கோமுக்கைக் கண்டு களிக்கலாம். இந்த பகுதியில் ஏராளமான பைன் மரங்களும் உள்ளன.
டோப்பவனில் இருக்கும் பசுமையான சமவெளி மிகவும் பிரபலமானது. கண்டிப்பாக இது சுற்றுலாப் பயணிகளின் கனவுத் தளமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications