Search
  • Follow NativePlanet
Share

குணா - ஆற்றங்கரையில் எழிலோவியம்!

8

மத்தியபிரதேச மாநிலம், மால்வா பகுதியில் உள்ள பார்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் குணா. இந்நகரம், சாம்பல் மற்றும் மால்வா பகுதியின் நுழைவு வாயிலாகத் திகழ்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் குணா நகரமும் ஒன்றாகும்.

குணா நகரம் - ஒரு வரலாற்று பார்வை!

தொன்மையான அவாந்தி ஆட்சி காலத்தின் ஒரு பகுதியாக குணா நகரம் விளங்கியது. சந்த் பிரத்யோத்தா மஹாசேனா என்பவர் அவாந்தி ஆட்சியை தோற்றுவித்தவர் ஆவார். பின்பு 18-ஆம் நூற்றாண்டில், புகழ்பெற்ற மராத்தியத் தலைவர் ராமோஜி ராவ் சிந்தியா, இந்நகரத்தைக் கைப்பற்றினார்.

1947-ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மத்திய பாரத் மாவட்டத்தில், இருந்த 16 மாவட்டங்களில், குணாவும் ஒன்றாகும். மத்தியபாரத், பிற்காலத்தில் மத்திய பிரதேசமாக மாறியது.

குணாவின் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் பல சுற்றுலாத் தலங்கள் குணா நகரில் உள்ளன. இந்நகரின் விவேக் காலணியில் அமைந்துள்ள பஞ்சமுகி ஹனுமன் ஆஷ்ரமம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.

ஹனுமனின் ஐந்து பலங்களுள், இந்த ஆஷ்ரமும் ஒன்றாகும். இந்நகரம், குணா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த ஆஸ்ரமத்தில், சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பல வசதிகள் உள்ளன.

மேலும், இங்கு பிஷ்புஜி திருக்கோவில் மற்றும் ஜைனத் திருக்கோவில் போன்ற ஆன்மீக தலங்களும் அமையப்பெற்றிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பஜ்ரங்கர் கோட்டையும் இங்கு உள்ளது.

குணாவை அடைவது எப்படி?

குணா நகரில் ரயில் நிலையம் இருப்பதால் இங்கு எளிதில் வந்து அடைய முடியும். பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பல ரயில்கள் இங்கு இயக்கப்படுகின்றன. விமானம் மூலமாக வர விரும்புபவர்கள், போபால் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பேருந்து அல்லது கார் மூலமாக குணா நகரை அடையலாம்.

குணாவை ரசிக்க ஏற்ற காலம்

பிப்ரவரி - மார்ச் மாதங்களில், அதிக குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல், மிதமாக இருக்கும். இந்த சமயத்தில் குணாவின் அழகை மன நிறைவோடு ரசிக்க முடியும்.

குணா சிறப்பு

குணா வானிலை

சிறந்த காலநிலை குணா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குணா

  • சாலை வழியாக
    மத்திய பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் இருந்தும் குணா நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 250 கிமீ நீளம் கொண்டிருக்கும், தேசிய நெடுஞ்சாலை 3 இல் அமைந்திருக்கிறது குணா நகரம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    குணா நகரில் அமைந்துள்ள ரயில் நிலையம் அகல ரயில் பாதையில் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களுக்குச் செல்ல பாதங்கோட் செல்ல வேண்டும். சமீப காலமாக, குணா நகருக்கு எளிதாகச் செல்ல மத்திய பிரதேச அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 188 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது குணா நகரம். விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனியார் கார் மூலம் குணாவை எளிதில் அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jun,Tue
Return On
01 Jul,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jun,Tue
Check Out
01 Jul,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jun,Tue
Return On
01 Jul,Wed