நேபாளி மந்திர் என்பது ஹஜிபுரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரத்யேக சைவக் கோவில் ஆகும். இந்த அற்புத கோவில், இடைக்காலத்தை சேர்ந்த நேபாளத் தளபதிகளில் ஒருவரான மத்ஹ்பார் சிங் தாபா என்பவரால் கட்டப்பட்டது.
இந்தக் கோவில் பகோடா கட்டிடக்கலை பாணியின் தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரச் சிற்பங்கள் இந்தக் கோவிலின் அழகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்குகின்றது.
இது போன்ற ஒரு நம்பமுடியாத கலைநயத்துடன் இமாலய கட்டிடக்கலையை தொட்டுச் செல்லும் இந்தக் கோவிலானது அதனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சியை தருகின்றது.



Click it and Unblock the Notifications