ஹாஜோ நகரில் இருக்கும் கணேஷ் திருக்கோவில் அனைவரையும் வசீகரிக்கும் ஒரு திருத்தலம். தேவ பவணா என்று மற்றொரு பெயரும் இக்கோவிலுக்கு உண்டு. கடவுளர்கள் சந்திக்க ஒன்று கூடும் இடமாக விளங்கியதால் தேவ பவணா என பெயர் வந்திருக்கிறது.
பெரிய யானை உருவம் கொண்ட இயற்கையான பாறையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பெரிய பாறையின் விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகத்திற்கு மட்டுமல்லாமல், கோவிலைச் சுற்றியிருக்கும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் காண பல்வேறு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையை கணேஷ் கோவிலில் காணலாம். மன அமைதியைத் விரும்புபவர்களுக்கு இவ்விடம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
ஹாஜோ நகரம் குவஹாத்திக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஆகையால் காலையில் கோவிலுக்கு சென்று, கணேசரை தரிசித்துவிட்டு, மாலையே வீடு திரும்பலாம்.



Click it and Unblock the Notifications