புனித மெக்காவின் அருள்கொண்டதாக கருதப்படுகிறது போவா மெக்கா எனும் மசூதி. வடகிழக்குப் பகுதியில், இஸ்லாமியர்களின் மிக முக்கியமான திருத்தளம் போவா மெக்கா.
இதனைக் கட்டுவதற்காக புனித மெக்காவில் இருந்து மண் கொண்டு வரப்பட்டிருக்கிறது. போவா என்றால் நான்கில் ஒரு பங்கு என்று அர்த்தம். ஆக, மெக்காவின் புனிதத்தில் நான்கில் ஒரு பங்கு புனிதம் கொண்டது போவா மெக்கா என்று பொருள்படுகிறது.
1657 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, கௌராச்சல் மலையில் அமைந்திருக்கிறது. இந்த மசூதியினுள், பிர் கியாசுதின் ஆவ்லியாவின் கல்லறை உள்ளது.
இஸ்லாமை இந்தப்பகுதியில் பரப்புவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் இவர் எனக் கருதப்படுகிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆட்சிகாலத்தில், மிர் லுதுஃபுல்லா -இ- ஷிராஜி அவர்கள் போவா மெக்காவை கட்டினார்.
பிர் கியாசுதின் ஆவ்லியாவுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக, வருடந்தோறும் பல இஸ்லாமியர்கள் இங்கு வருகின்றனர். போவா மெக்காவின் கட்டிடக்கலை அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வருகின்றனர். ஹயாக்ரிவ மாதவ கோவிலுக்கு அருகில் போவா மெக்கா அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications