இளம் வயதிலேயே தீவிரமாக சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சுப்ரமண்ய சிவா அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
இவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். அந்நாளில் மெட்ராஸ் பிரசிடென்சி அரசாங்கத்தின் முதல் அரசியல் கைதியாக இவர் சிறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வன்முறை சார்ந்த் தீவிரவாதத்தால் மட்டுமே அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது இவரது கருத்தாக இருந்தது. சிறந்த கவிஞராகவும் அறிவாளியாகவும் திகழ்ந்த இவரது கவிதைகள் ஞானபானு என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
பெண்ணாகரம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சிவா நினைவுச்சின்னம் 1925ம் ஆண்டு அவர் அடக்கம் செய்யப்பட்ட ஸ்தலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications