நோஸா செனோரா டோ ரொசாரியோ என்ற பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த போர்த்துகீசிய தேவாலயம் 1600ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. ஹோலி ரோசரி பஸிலிகா என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் மேற்கு வங்காள வரலாற்றில் ஒரு முக்கிய காலச்சான்றாக வீற்றிருக்கிறது.
இந்த தேவாலயம் உருவாக்கப்பட்ட அதே வருடத்தில்தான் ராணி எலிசபெத் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி செயல்படுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
தொன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தேவாலயத்துக்கு உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகள் இந்த வருகை தருகின்றனர். மூன்று பூஜை பீடங்கள், ஆர்கன் இசைக்கருவி மற்றும் கப்பல் முகப்பு போன்ற நுழைவாயில் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications