பாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பாடனிகல் கார்டன் என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா ஹௌரா நகர மையத்திலிருந்து சிறிது தூரத்திலேயே அமைந்துள்ளது. 100 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ள இந்த பூங்காவில் 12000 த்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் வளர்க்கப்படுகின்றன.
1700ம் ஆண்டுகளில் ஒரு ஆங்கிலேய ராணுவத்தளபதி ஒருவரால் இந்த தோட்டப்பூங்கா நிறுவப்பட்டுள்ளது. மலர்த்தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியும் இந்த தோட்டப்பூங்காவில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு மாலை நேரத்தை செடிகள் மற்றும் பூக்களை பார்த்து ரசித்தபடி ஓய்வாக கழிக்க இந்த பூங்கா மிகவும் ஏற்றது.



Click it and Unblock the Notifications