ஹூப்ளியில் பயணிகளுக்கு நல்லதோர் பொழுதுபோக்கு உல்லாச மையமாக ‘மாருதி வாட்டர் பார்க்’ மற்றும் ‘வாட்டர் வேர்ல்டு’ அமைந்துள்ளது. ஹூப்ளியில் கார்வார் சாலையில் ESI மருத்துவமனைக்கு அருகில் இந்த ‘மாருதி வாட்டர் வேர்ல்டு’ எனும் உல்லாச பொழுதுபோக்கு மையம் அமைந்துள்ளது.
இங்கு பலவிதமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம். ‘கன்ட்ரி கிளப்’ ரிசார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வாட்டர் வேர்ல்டு பலவித சாகச நீர்விளையாட்டு (சவாரி) அம்சங்களை கொண்டுள்ளது.
குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களுக்கு குதூகலமூட்டும் வகையில் இந்த தனியார் நீர் விளையாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications