Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » ஈர்க்கும் இடங்கள் » குளமாவு

குளமாவு, இடுக்கி

35

குளமாவு நகரம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பிரசித்தமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மயங்க வைக்கும் இயற்கைக்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த மலைப்பிரதேசத்திற்கு ஏராளமான இயற்கை ரசிகர்கள் விஜயம் செய்கின்றனர்.

மலையேற்றத்துக்கும் இது மிகவும் உகந்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள குளமாவு அணையானது இடுக்கி நீர்த்தேக்க திட்டத்தில் அடங்கியுள்ள மூன்று அணைகளில் ஒன்றாகும்.

குளமாவு அணை இங்குள்ள முக்கியா சுற்றுலா அம்சமாகவும் விளங்குகிறது. பாறைப்பாங்கான மலைகளின் நடுவே 33 ச.கி.மீ பரப்பளவில் பரந்திருக்கும் இந்த நீர்த்தேக்கத்தை தரிசிப்பது ஒரு உன்னதமான பரவச அனுபவமாகும்.

குளமாவு அணைக்கும் செறுதோணி அணைக்கும் இடையே படகுப்போக்குவரத்து மூலமாகவும் உல்லாச சவாரி மேற்கொள்ளலாம். மூலமட்டோம் எனும் சுரங்கத்தள மின்னுற்பத்தி நிலையமும் இங்கு அருகிலுள்ள - பார்க்க வேண்டிய மற்றொரு அம்சமாகும்.

குளமாவு நகருக்கு அருகிலேயே இடுக்கி காட்டுயிர் சரணாலயமும் அமைந்துள்ளது. புகழ் பெற்ற நாடுகாணி மலைகள் குளமாவு நகரத்திலிருந்து 70 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun