மாலங்கரா நீர்த்தேக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரித்தேக்கமாகும். இது 11 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இயற்கை எழிலை ஏகாந்தமாக ரசித்து மகிழ்வதற்கு மிகவும் பொருத்தமான இந்த ஸ்தலத்தில் பயணிகள் படகுச்சவாரி, மீன் பிடித்தல் போன்ற நிதானமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம்.
இடுக்கி மாவட்டத்தில் தொடுப்புழா நகரத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் இந்த ஏரிப்பகுதி அமைந்துள்ளது. மலங்கரா நீர்த்தேக்கம் கேரளாவின் முக்கிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. படகுச்சவாரி செல்வதற்கு, மீன் பிடித்தலுக்கும் ஏற்ற இந்த நீர்த்தேக்க ஸ்தலம் புகைப்பட ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications