இகத்புரி பகுதியில் அமைந்துள்ள இந்த திரிங்கால்வாடி கோட்டையை ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்றே சொல்லலாம். கடல் மட்டத்திலிருந்து பிரமிக்க வைக்கும் 3000 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டையிலிருந்து இகத்புரி பிரதேசத்தின் எல்லா இயற்கை எழில் அம்சங்களையும் கண் குளிரப் பார்த்து ரசிக்கலாம்.சுற்றியுள்ள நகரத்தின் காட்சிகளும், கீழே தெரியும்பள்ளத்தாக்கின் அழகும், சூழ்ந்திருக்கும் பசுமைப்பிரதேசங்களின் செழிப்பும் இந்த கோட்டையிலிருந்து மிக அழகாய் வண்ண ஓவியம் போன்றே காட்சியளிக்கின்றன.
இந்த கோட்டையை சென்றடைவது சற்று சிரமம் என்பதால் சாகசமான மலை ஏற்றத்தில் ஈடுபட விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது மிகவும் பிடித்த இடமாக உள்ளது.இந்த கோட்டையில் அமைந்துள்ள புராதன ஹனுமான் கோயில் இப்பிரதேசத்தின் தொன்மையான தோற்றத்துக்கு மேலும் ஒரு புராதன வசீகரத்தை அளிக்கின்றது.



Click it and Unblock the Notifications