கான் நதிக்கரையில் இருக்கும் கிருஷ்ணாபுரா சாட்ரி, ஹோல்கார் மன்னர் குடும்பத்தவர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டு நினைவிடங்களாக இருக்கும் இடமாகும். துல்லியமான மற்றும் கூர்ந்த வேலைப்பாடுகள் இந்த சாட்ரிகளின் சிறப்பம்சமாகும்.
இந்த நினைவிடங்கள் மராத்திய கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. கூம்பு போன்ற உயரமான வடிவமைப்புகள் மற்றும் வட்ட வடிவமான கூரைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த நினைவிடங்கள் காண வரும் அனைவரின் கண்களுக்கும் அற்புதமான காட்சிகளை இன்றளவும் விருந்தாக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, காலங்கள் கடந்து சென்றாலும் இவற்றின் அழகும், வசீகரமும் இன்றும் மக்கள் மனதில் கம்பீரமாக உள்ளன. இன்றைய காலத்திலும் கூட பெருவாரியான மக்கள் இந்த கட்டிடக்கலை அதிசயங்களை கூட்டம் கூட்டமாக வந்து கண்டு இரசித்து செல்கின்றனர்.
இரவு வேளைகளில் இந்த சாட்ரிகள் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். மேலும், நீரூற்றுகளும் இங்கு வடிவமைக்கப்பட்டு இதன் அழகு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டம் இவ்விடத்தின் அழகை அதிகரிப்பதுடன், பல்வேறு சுற்றுலாப் பயணிகளையும் கவருவதாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications