கான் நதிக்கரையில் பிரமிக்கத்தக்க வகையில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள அற்புதமான இடம் தான் லால் பாக் அரண்மனையாகும். இந்த அரண்மனையை மகாராஜா சிவாஜி ராவ் ஹோல்கார் என்பவர் கட்டினார்.
ராஜ குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாக இந்த அரண்மனை விளங்கியது. லால் பாக் அரண்மனையின் தனித்தன்மையான கட்டிடக்கலையின் காரணமாகவே அது இந்தூரின் புகழ் பெற்ற பார்வையிடங்களில் ஒன்றாக உள்ளது.
ஹோல்கார் அரசர்களின் இராஜ மற்றும் படோடபமான வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இந்த மாளிகை உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ரோஜா தோட்டங்களை இந்த மாளிகை கொண்டிருக்கிறது.
இந்த மாளிகையின் நுழைவாயில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் இந்த மாளிகை முழுமையும் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
இந்த மாளிகையின் சுவர்கள் மற்றும் கூரைகளில் இருக்கும் சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.



Click it and Unblock the Notifications