இந்தூர் சுற்றுலாவில் ராஜ்வாடா அரண்மனை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. ஹோல்கார் வம்சத்தவர் தங்குமிடமாக ராஜ்வாடா விளங்கி வந்திருக்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த அரண்மனை, பார்வையாளர்களுக்கான சிறந்த அமைவிடமாக உள்ளது.
அதன் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலையில் பிரெஞ்சு, மராத்திய மற்றும் முகலாய வேலைப்பாடுகள் கலவையாக கலந்துள்ளன. ஏழு அடுக்குகளில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை, இந்தூர் நகரத்தின் மையமான பார்வையிடமாக உள்ளது.
இந்த அரண்மனையின் நுழைவாயிலில் காணும் காட்சி உங்கள் கண்களை விட்டு என்றென்றும் மறவாமல் நிலைத்திருக்கும். இது ஒரு பெரிய வளைவான நுழைவாயிலாக உள்ளது.
இந்நுழைவாயிலில் ஒரு பெரிய மரக்கதவு உருவாக்கப்பட்டு, அதில் இரும்பினாலான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பெருமைமிக்க சின்னமாக இருக்கிறது.
இந்த அரண்மனை முழுவதுமே கற்கள் மற்றும் மரங்களால் கட்டப்பட்டுள்ளது. பெரிய ஜன்னல்கள், மாடங்கள் மற்றும் நடக்கும் தாழ்வாரங்கள் ஆகியவை இன்றும் ஹோல்கார் அரசர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளன. ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் இந்தூரில் காண வேண்டிய அற்புதமான இடமாக ராஜ்வாடா அரண்மனை உள்ளது.



Click it and Unblock the Notifications