இடார்ஸியில் உள்ள துவாரகாதேஷ் மந்திர் இந்து மதக் கடவுளான கிருஷ்ணணுக்காக கட்டப்பட்ட மிக முக்கியமான கோவிலாகும். இந்த கோவில் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்ட இந்த கோவிலுக்கு சென்று ஆசி பெறுவதை பாக்கியமாகக் கருதுகின்றனர். இந்த கோவிலில் மூலவருக்கு மிகப் பெரிய சிலையும், மற்றும் சில பரிவார தெய்வங்களுக்கு சிறிய சிலைகளும் உள்ளன.
இந்த கோவிலின் அமைப்பு ஒரு அற்புதமான படைப்பாகும். துவாரகாதேஷ் மந்திர் உள்ளூர் மக்களிடம் மட்டுமல்ல சுற்றுலா பயணிகள் மத்தியிலும் பிரபலமாக உள்ளது. இடார்ஸிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கண்டிப்பாக இந்த கோவிலுக்குச் செல்ல மறக்கக் கூடாது.
இந்த கோவில் மற்றும் இங்கே நிழவும் தெய்வீக சூழ்நிலை போன்றவை மக்களின் மனதை மயக்குகின்றன. இடார்ஸி இரயில்வே சந்திப்பிற்கு அருகே உள்ள இந்த கோவிலுக்கு செல்ல டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications