Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜபல்பூர் » ஈர்க்கும் இடங்கள் » பார்கி அணை

பார்கி அணை, ஜபல்பூர்

25

ஜபல்பூரில் உள்ள பார்கி அணை, நர்மதா நதியில் அமைந்துள்ள முக்கியமான அணைகளுள் ஒன்றாகும். இந்த நதியில் உள்ள சுமார் 30 அணைகளுள்,  தொடக்ககாலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த அணைகளுள் இதுவும் ஒன்றாகும்.

ஜபல்பூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக இருப்பதனால் பார்கி அணை அதீத முக்கியத்துவம் கொண்டு விளங்குகிறது. பார்கி மாற்றுவழித் திட்டம் மற்றும் ராணி அவந்திபாய் லோதி சாகர் திட்டம் ஆகிய இரு நீர்ப்பாசனத் திட்டங்களும் இவ்வணையினால் மேம்படுத்தப்பட்டவையாகும்.

காலப்போக்கில், பார்கி அணை ஜபல்பூரின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் ஆகிவிட்டது. மத்தியப்பிரதேச அரசு, தானே முன் வந்து, அணை மற்றும் நீர்த்தேக்கத்தின் முழு அமைப்பையும் கண்டு ரசிக்கக்கூடியவாறு, அணைக்கு எதிர்ப்புறத்தில் ஒரு உல்லாச விடுதியை ஆரம்பித்துள்ளது.

படகுச் சவாரி, மீன்பிடிப்பு, நீர் ஸ்கூட்டர் போன்ற பல்வேறு வசதிகளும் காணப்படும் இவ்வணை இங்கு வருவேரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.

மேலும், மைனா, கிளிகள், நாரைகள், புறாக்கள் மற்றும் உள்ளூர் கரிச்சாங்குருவிகள் போன்ற பறவையினங்கள் இந்த அணையைச் சூழ்ந்துள்ள பெரிய நீர் நிலையில் வந்து தம் தாகத்தைத் தணிக்க நீர் அருந்திச் செல்கின்றன. இந்த அணை, பறவையியல் பாடம் பயிலும் எந்த ஒரு மாணாக்கரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue