ஐயலோங் பூங்கா, ஜோவோய் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. புனிதமான வழித்தடத்தை கொண்டிருப்பதால் பார்க்க வேண்டிய பூங்காவாக இருக்கும் இந்த இடம், பின்தோவா பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளையும் காட்டும் இடமாக உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட DRDA சுற்றுலா திட்டத்தின் வாயிலாக இந்த பூங்கா தொடர்ச்சியாக புனரமைக்கப்பட்டும், அழகுபடுத்தப்பட்டும் வந்துள்ளது.
ஐயலோங் பூங்காவை முதன்மையான சுற்றுலாத் தலமாக மாற்றும் பொருட்டாக, இங்கே ஒரு சுற்றுச்சூழல் பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவுடன் சேர்ந்து, நீர்த்தேக்கங்கள், கழிப்பறகைள், கால்வாய்கள் மற்றும் உடை மாற்றும் அறைகள் ஆகியவையும் உள்ளன.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த சிலவகை பூக்களால் இந்த பூங்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது. சரிவான பசும் புல்வெளிகள் மற்றும் பள்ளத்தாக்கில் மறையும் சூரியன் ஆகியவை இந்த பூங்காவின் சிறப்பான அம்சங்களாகும்.
மேகாலயாவின் முதன்மையான பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாக ஐயலோங் பூங்காவை தரம் பிரிக்க முடியும். இந்த பூங்காவிற்கு, ஷில்லாங்கில் இருந்து வாகனங்களில் வந்து செல்ல முடியும். வருவதற்கு ஏற்ற பருவமாக நவம்பர் முதல் ஜுன் வரையிலான மாதங்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications