ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உளள யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமி பயணத்தில் அடைய முடியும்.
அபரிமிதமான பசுமைப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த யூ லூம் சுனாராஜா குன்றுகளுக்கு செல்லும் வழியில், பசும்புல்வெளிகளுக்கிடையே குறுக்கும் நெடுக்குமாக பரந்து விரிந்திருக்கும் மலைகளைக் காண முடியும்.
இந்த ஏரி இருக்கும் பகுதியை வயதான யானைகள் தங்களின் இறுதி ஓய்விடமாக தேர்ந்தெடுத்து, அவற்றின் மரணத்தை அரவணைக்கும் இடமாக கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதே போல, சக்தி வாய்ந்த நாகராஜா இந்த இடத்தில் தன்னுடைய நாக மாணிக்கத்தைக் காத்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
அமைதியான தண்ணீர், சுத்தமான காற்று மற்றும் நகரத்தின் ஆரவாரங்களிலிருந்து விலகியிருக்கும் தொலைவு ஆகியவற்றின் காரணமாக யூ லூம் சுனாராஜா சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாழ்வின் ஓரிரு நாட்களை அமைதியாக கழிக்க தேர்ந்தெடுக்கும் இடமாக உள்ளது. ஷில்லாங்கில் இருந்து வாடகை காரில் இங்கு வருவது மிகவும் எளிமையான வழிமுறையாகும்.



Click it and Unblock the Notifications