Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்ப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஜெய்கர் கோட்டை

ஜெய்கர் கோட்டை, ஜெய்ப்பூர்

93

ஜெய்கர் கோட்டை அல்லது வெற்றிக்கோட்டை என்றழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த கோட்டை ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கழுகுமலை என்றழைக்கப்படும் மலையின் உச்சியில் ஆம்பேர் கோட்டையிலிருந்து 400 அடி உயரத்தில் இந்த ஜெய்கர் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது.

முறையே தெற்கு மற்றும் கிழக்குத்திசை நோக்கி அமைந்துள்ள துங்கார் தர்வாசா மற்றும் அவாணி தர்வாசா ஆகிய இரு வாசல்கள் இந்த கோட்டையில் உள்ளன. கோட்டை வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ள சாஹர் தலாவ் எனும் நீர்த்தேக்கம் இந்த கோட்டையின் பிரதான நீராதாரமாக பயன்பட்டுள்ளது.

ஒரு முக்கியமான படைக்கேந்திரமாக திகழ்ந்துள்ள இந்த கோட்டை 3 கி.மீ நீளமுடைய கோட்டைச்சுவரை கொண்டுள்ளது. இந்த கோட்டையின் உச்சியில் ஜெய்வான் எனப்படும் 50 டன் எடையுடைய பீரங்கி ஒன்றும் காணப்படுகிறது. 8 மீட்டர் நீளமுடைய வாய்ப்பகுதியை கொண்டுள்ள இது உலகில் மிகப்பெரிய சக்கர பீரங்கிகளில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது.

இந்த கோட்டையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள தியா புர்ஜ் எனப்படும் ஏழடுக்கு மாளிகையிலிருந்து கீழே மொத்த நகரத்தின் அழகையும் கண்டு ரசிக்க முடிகிறது.

இந்த கோட்டையின் அடியில் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தியும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வரலாற்றுகால நாணயங்கள், பீரங்கிகள் மற்றும் பொம்மைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu