ஷீஸ் மஹால் எனும் இந்த அற்புத மாளிகை ஆம்பேர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இது கண்ணாடிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜெய் மந்திர் எனப்படும் மாளிகையின் ஒரு அங்கமான இந்த ஷீஸ் மஹால் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கூரை மற்றும் சுவர்களில் பொதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் மூலம் இந்த கூடம் முழுவதும் வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. 1623ம் ஆண்டு ஜெய்ப்பூர் மன்னர் ராஜா ஜெய் சிங்’ அவர்களால் கட்டப்பட்ட இந்த மாளிகையானது ‘அரண்மனை விருந்தினர்’களை சந்திக்கும் பிரத்யேகக்கூடமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications