ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த ‘சிஸோடியா ராணி கா பாக்’ எனும் அழகிய பூங்காத்தோட்டம் அமைந்துள்ளது. இந்திய மற்றும் முகலாய கலை அம்சங்கள் சேர்ந்து உருவாகியுள்ள இந்த தோட்டத்தில் நீரூற்றுகள், காட்சி மாடங்கள் மற்றும் சிறு மண்டபங்கள் உள்ளன.
இங்கு பயணிகள் சில சிற்பங்கள் மற்றும் ராதா கிருஷ்ணா சிருங்கார சிற்பவேலைப்பாடுகள் ஆகியவற்றைக் காணலாம். இந்த பூங்காத்தோட்டம் தற்சமயம் விழா நிகழ்ச்சிகள் மற்றும் திருமணநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான இடமாக பயன்படுகிறது.



Click it and Unblock the Notifications