அதிகமான கோயில்கள், பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை கொண்டிருக்கும் ஜாம்நகரில் இந்து ஆன்மீக தலங்கள் நிறையவே அமைந்திருப்பதால் சோட்டா காசி (குட்டி காசி) என்ற சிறப்புப்பெயரும் இதற்கு உண்டு.
இருப்பினும் சில முக்கியமான தர்க்காக்களும் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் இந்த போஹ்ரா ஹஜிரா எனும் தர்க்கா. இது தாவூதி போஹ்ரா இனத்தார்க்கு உரியதாகும்.
ராஜ்கோட் நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஒரு ஆற்றங்கரையில் வீற்றுள்ள இந்த தர்க்கா ஒரு முஸ்லிம் யோகியின் பெயரில் வெண் சலவைக்கற்களால் எழுப்பப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications