பாரி மஸ்ஜித் என்றும் அழைக்கப்படும் இந்த ஜமா மஸ்ஜித் ஜௌன்பூர் நகரத்திற்கு வடகிழகாக 2.2 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த 15ம் நூற்றாண்டு வரலாற்றுச்சின்னம் ஃபிரோஸ் ஷா துக்ளக் மன்னரின் காலத்தில் கட்டப்பட்டிருக்கிரது.
டெல்லியிலுள்ள முகாலயாச்சின்னங்கள் மற்றும் அடாலா மசூதியைப்போன்றே இந்த ஜமா மஸ்ஜித் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படிகளின் வழியாக ஏறிச்செல்லும்படியாக 6 மீட்டர் உயரமுள்ள ஒரு பீட அமைப்பின்மீது இந்த மசூதி எழுப்பப்பட்டிருக்கிறது. தூண்கள் போன்ற விதான வாசல் வழியாக இதன் உள்ளே நுழையலாம்.
இந்த மசூதியின் தொழுகைக்கூடத்தின் இருபுறங்களிலும் சுரங்கப்பாதைகள் போன்ற மாடங்கள் காணப்படுகின்றன. இதன் பிரம்மாண்ட குமிழ் கோபுரம் 11.4 மீ விட்டமுடையதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் சூரிய வெளிச்சம் உள்ளே நுழையும் படியாக சிறு சிறு ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மசூதியின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் வழக்கமான முகலாய பாணி அலங்கார சித்தரிப்புகள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications