ஜஜ்ஜாரில் உள்ள புவா வாலா தலாப், மனம் நெகிழ வைக்கக்கூடியதான 375 வருடப் பழமை வாய்ந்த காதலின் பின்னணியில் கட்டப்பட்டதாகும்.
புராணங்களின் படி, ஒரு நாள் ஜஜ்ஜார் நவாப்பின் சத்ரப் ஆக விளங்கிய முஸ்தஃபா கானின் மகளாகிய புவா, தன் குதிரையை காட்டுக்குள் செலுத்தியதாகவும், துரதிர்ஷ்டவசமாக ஒரு புலியால் தாக்கப்பட்டு, அபலைக்குரல் எழுப்பியதாகவும், அப்போது அருகில் வேலை செய்து கொண்டிருந்த கம்பீரமான, ஏழை மரம் வெட்டியாகிய ஹாஸன் அவளது கதறலைக் கேட்டு அவ்விடத்துக்கு ஓடோடி வந்து, புலியைக் கொன்று, மிகவும் அபாயகரமான நிலையிலிருந்த புவாவைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
புவாவின் தந்தை நன்றியுணர்வு மேலோங்க, அம்மரம் வெட்டிக்கு ஒரு சன்மானம் வழங்க முன்வந்துள்ளார். ஆனால், ஹாஸன் அவரது மகளை கரம் பிடிக்கக் கேட்டதும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகினார்.
மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு அதற்கு ஒப்புக் கொண்ட முஸ்தஃபா கான், திருமணத்தை சில காலம் தள்ளி வைத்திருக்கிறார். ஒரு நாள் அவர் ஹாஸனை நவாப்பின் படையில் சேர்ந்து போர்க்களத்துக்குச் செல்லும்படி கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்டு போர்க்களம் சென்ற ஹாஸன் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்.



Click it and Unblock the Notifications