17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அதிஷய் ஜெயின் கோயில்கள் புகழ்பெற்ற ஜெயின் கோயில்களாக அறியபடுகின்றன. இவை ஜாலாவார் நகரத்திலிருந்து 34 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.
பழமையான கலையம்சங்களுடன் அற்புதமான தோற்றத்துடன் இந்தக்கோயில்கள் காட்சியளிக்கின்றன. 6 அடி உயரத்தில் தியானக்கோலத்தில் காட்சியளிக்கும் ஆதிநாதர் சிலை வெகு தூரப்பிரதேசங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது.
மேலும், இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications