பீம்சாகர் அணை ஜாலாவார் நகரத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. உஜட் ஆற்றின் குறுக்கே ‘மௌ போர்டா’ சிதிலங்களின் அருகே இந்த அணைப்பகுதி உள்ளது. கிச்சி சௌஹான் வம்சத்தினர் தங்கள் தலைநகராக கொண்டு ஆண்ட ஸ்தலம் இந்த மௌ போர்டா ஆகும்.
இங்கு கோயில்களின் சிதிலங்கள், அரண்மனையின் இடிபாடுகள் மற்றும் மசூதிகளின் மிச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிகிறது. இவை தவிர, இப்பிரதேசம் முழுதுமே இயற்கை எழிலுடன் காட்சி அளிப்பதால் பயணிகளுக்கு ஏற்ற பிக்னிக் ஸ்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications