ஜாலாவார் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் சந்திரபாகா ஆற்றங்கரையில் சந்திரபாகா கோயில்கள் அமைந்துள்ளன. 6ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட இக்கோயில்கள் பழங்கால சிற்ப மற்றும் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக திகழ்கின்றன.
தோரண வாயில் அமைப்புகள் மற்றும் அலங்கரிப்புகளுடன் காணப்படும் தூண்கள் ஆகியவை அக்கால கலைஞர்களின் திறமையை நினைது பிரமிக்க தூண்டுகின்றன. இந்த ஆற்றங்கரையில் பல கோயில்கள் அமைந்துள்ள போதிலும் அவற்றில் ஷாந்திநாத் ஜெயின் கோயில், ஸ்ரீ துவார்கதீஷ் கோயில் மற்றும் பத்மநாத் கோயில் ஆகிய மூன்றும் பிரசித்தமாக அறியப்படுகின்றன.



Click it and Unblock the Notifications