ஜாலாவார் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த காக்ரான் கோட்டை அமைந்துள்ளது. 7ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டுக்குள் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது மூன்று புறமும் அஹு மற்றும் காளிசிந்த் நீர்த்தேக்கங்களால் சூழப்பட்டுள்ளது.
நீர் மற்றும் வனம் ஆகிய இரண்டு அம்சங்கள் சூழ்ந்திருக்கும் இந்த வரலாற்று ஸ்தலம் அபூர்வமானதாக கருதப்படுகிறது. இந்த கோட்டைக்கு வெளியே பயணிகள் சூஃபி ஞானி மித்தே ஷா அவர்களின் தர்க்காவை காணலாம்.
ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் திருநாளின்போது இங்கு ஒரு சந்தையும் கூடுகிறது. ஞானி பக்த கபீர் காலத்தில் வாழ்ந்த பீபாஜி எனும் ஞானியாரின் ஆசிரமமும் இந்த கோட்டைக்கு அருகில் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications