ஜாலாவார் அரசு அருங்காட்சியகம் 1915ம் ஆண்டிலேயே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரிதான நூற்பிரதிகள், அழகைய சிற்பங்கள், பழமையான நாணயங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தின் பிரதான சேகரிப்புகளாகும்.
இவை தவிர 5ம் நூற்றாண்டு மற்றும் 7ம் நூற்றாண்டைச்சேர்ந்த சில செப்பேடுகளும் இங்கு காணப்படுகின்றன. இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பலவகையான சிலைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாஸ்கோவில் நடந்த ‘ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வர நடராஜர் சிலையும் இங்கு உள்ளது. லட்சுமிநாராயணா, திரிமூர்த்தி, நடராஜர், விஷ்ணு மற்றும் கிருஷ்ணர் சிலைகளையும் இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications