ககுனி எனும் இந்த சிறு நகரம் பர்வாண் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது ஜாலாவார் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் உள்ளது. இடிபாடுகளுடன் காணப்படும் ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள் இந்த ஸ்தலத்தின் முக்கிய அம்சங்களாகும்.
கணேஷ்க்கடவுளின் முழு உருவச்சிலை மற்றும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிவலிங்கம் ஆகியன இங்கு பயணிகளை பெரிதும் கவரும் விசேஷ அம்சங்களாக உள்ளன. ராஜா பீம் தேவ் என்பவரால் கட்டப்பட்டுள்ள பீம்கர் கோட்டை இந்த ஆற்றின் மறுகரையில் காணப்படுகிறது. இந்த வரலாற்றுச் சின்னத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications