Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாலாவார் » ஈர்க்கும் இடங்கள் » ஜாலராபட்டண்

ஜாலராபட்டண், ஜாலாவார்

19

ஜாலாவார் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த ஜாலரா பட்டண் எனும் நகரம் அமைந்துள்ளது. இதன் விசேஷமான அம்சம் என்னவெனில் இந்த நகரம் முழுக்கவே ஒரு கோட்டைச்சுவரால் சூழப்பட்டிருப்பதாகும்.

விக்கிரமாதித்திய மஹாராஜாவின் புதல்வராகிய பர்மாரா சந்திர சேன் இந்த நகரை கட்டியுள்ளார். ‘கோயில்மணி நகரம்’ என்ற பொருளைத்தரும் பெயரைக்கொண்டுள்ள இந்த ஜாலராபட்டண் எனும் அற்புத நகரம் சந்திரபாகா ஆற்றங்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் டோட் எனும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி இங்குள்ள கோயில்களின் எண்ணிக்கை 108 என்பதாக கணக்கிட்டு சொன்னதாக ஒரு சுவாரசியமான கதை சொல்லப்படுகிறது. 100அடி உயரம் கொண்ட 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூரியக்கோயில் இங்கு புகழுடன் அறியப்படுகிறது.

இக்கோயில் அற்புதமான நுணுக்கமான சிற்பவடிப்புகளைக்கொண்டுள்ளது. 6ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட கோயில்களின் தொகுப்பும் இந்த நகரில் அமைந்துள்ளது. குறிப்பாக ஜாலா ஜலீம் சிங் மன்னரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாந்திநாத் ஜெயின் கோயில் மற்றும் ஸ்ரீ துவார்கதீஷ் கோயில் ஆகிய இரண்டும் இங்குள்ள ஏனைய முக்கியமான கோயில்களாக கருதப்படுகின்றன.

ஸ்ரீ துவார்கதீஷ் கோயிலுக்கு விஜயம் செய்யும் பயணிகள் அங்குள்ள மூலிகை தோட்டம் மற்றும் சௌபாத்தி ஆகிய இரண்டு அம்சங்களையும் மறக்காமல் பார்ப்பது அவசியம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Aug,Sat
Return On
02 Aug,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Aug,Sat
Check Out
02 Aug,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Aug,Sat
Return On
02 Aug,Sun