கர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிற ஜாலாவார் கோட்டை ஜாலாவார் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது. 1840 -1845ம் ஆண்டுகளில் மஹாராஜா ராணா மதன் சிங் இதைக்கட்டியுள்ளார்.
தற்சமயம் இந்த கோட்டை வளாகத்தில் மாவட்டத்தலைவர் அலுவலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன. ராணா மதன் சிங் மஹாராஜாவுக்கு அடுத்து வந்த மன்னர்கள் இந்த அரண்மனையின் அழகை ஓவியங்கள் மூலம் மேலும் மெருகேற்றியுள்ளனர்.
இந்த ஓவியங்கள் இன்றும் இந்த அரண்மனை அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இவற்றை பார்க்கலாம். இந்த அரண்மனை வளாகத்தில் உள்ள ஜெனனா காஸ் எனப்படும் அந்தப்புர மாளிகையில் சுவர்ப்பூச்சு ஓவியங்களையும் காணலாம். ஹடோதி ஓவியப்பாணியில் அமைந்துள்ள இவை கண்ணாடிகள் மற்றும் சுவர்ப்பகுதியில் தீட்டப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications