1531ம் ஆண்டு ராவ் கங்கா எனும் மன்னரின் ராணியாகிய நானக் தேவி என்பவரால் இந்த புகழ்பெற்ற கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் உள்ளே காணப்படும் சிவலிங்கத்திற்கு அருகில் ‘கங்கா பவாரி’ எனும் தீர்த்தக்குளத்தையும் பக்தர்கள் காணலாம்.
கர்ப்பக்கிருகம், மண்டப பவனம் மற்றும் கீர்த்தன பவனம் போன்ற அமைப்புகளை இந்தக் கோயில் கொண்டுள்ளது. கோயில் முன்வாசல் கதவு சந்தன மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications