ஜோத்பூர் நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் ஜோத்பூர்-ஜெய்சல்மேர் சாலையில் இந்த மாச்சியா சஃபாரி பார்க் எனப்படும் காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளது. இது இயற்கைச்சிற்றுலாவுக்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.
இங்கு இயற்கையான சூழலில் மானிட்டர் உடும்புகள், பாலைவன நரிகள், நீல எருதுகள், கீரிகள், முயல்கள், காட்டுப்பூனைகள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகள் வசிக்கின்றன.
மேலும், பறவை ரசிகர்கள் பலவிதமான அரிய பறவைகளையும் இந்தப் பூங்காவில் பார்த்து ரசிக்கலாம். இங்கு அமைந்துள்ள ஒரு அழகிய கோட்டை மேலிருந்து சூரிய அஸ்தமனத்தின் ரம்மியமான காட்சியை காணமுடிகிறது.



Click it and Unblock the Notifications