மஹாமந்திர் கோயில் ஜோத்பூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் மந்தோர் சாலையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான கட்டிடக்கலை அதிசயமாகும். இது 1812ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. அமைதியான இந்த திருக்கோயில் 84 தூண்கள் தாங்கி நிற்குமாறு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இதன் சுவர்களில் யோகக்கலையின் விதவிதமான நிலைகள் பாரம்பரிய புடைப்புச்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் வளாகத்தில் பல புராதன சன்னதிகள் நுணுக்கமான கல்வேலைப்பாடுகளோடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.