ஜோத்பூர் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் இந்த ஒஸியன் எனும் புராதன நகரம் அமைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புராதன கோயில்களைக் கொண்டுள்ளது.
இங்கு அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜெயின் கோயில்கள், சாச்சியா மாதா கோயில், சூரிய பஹவான் கோயில், ஹரிஹரர் கோயில், பிப்பலா தேவி கோயில், ஷிவ் மந்திர் கோயில் மற்றும் விஷ்ணு கோயில் ஆகியன காணப்படுகின்றன.
இவற்றில் ஜெயின் கோயில்கள் 8ம் நூற்றாண்டு மற்றும் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. சூரிய பஹவான் கோயிலும், சாச்சியா கோயிலும் அவற்றின் அழகுக்காகாக பிரசித்தி பெற்றுள்ளன.
8ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை இந்நகரம் ஒரு பிரசித்தமான வணிக மையமாக திகழ்ந்திருக்கிறது. இன்றும் இது ராஜஸ்தானின் ஒரு பாலைவனச்சோலையாக திகழ்கிறது.
ஒஸியன் நகரம் தன் கோட்டைகள் மற்றும் ஒட்டகச்சவாரி போன்ற சுற்றுலா அம்சங்களால் சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது. ஒட்டகச்சவாரி செய்தவாறே பயணிகள் கோயில்களின் அழகு மற்றும் கட்டிடக்கலை அம்சங்களை பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications